முத்திரைபதித்த முன்னோடிகள்: சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கு வாரி வழங்கிய திரு. பி.கோவிந்தசாமி பிள்ளை
1905ஆம் ஆண்டு கப்பல் மூலம் தஞ்சோங் பகாரை வந்தடைந்தார் திரு.கோவிந்தசாமி.
1929ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், 15 வயது பக்கிரி அம்மாளைத் திருமணம் முடித்தார். அதே ஆண்டு, சிங்கப்பூருக்குத் திரும்பினார்.
கடன் கொடுப்போராக விளங்கிய செட்டியார் சமூகத்தவரிடம், 2,000 வெள்ளி கடனாகப் பெற்று சொந்தத் தொழிலைத் தொடங்கினார்.
மசாலா பொருள்கள், எண்ணெய், தானியங்கள் முதலியவற்றை அவர் விற்பனை செய்தார். தொழில் சிறப்பாக நடந்தது.
அவரின் PGP சேலைக் கடை மக்களிடையே பிரபலமாக இருந்தது.
1980ஆம் ஆண்டு 93வயதில் மாரடைப்பால் காலமானார் திரு. கோவிந்தசாமி.
1960களில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான நன்கொடையை அவர் வழங்கினார். அங்கு திருமண மண்டபம் கட்டுவதற்கும் அந்த நன்கொடை உதவியது.
அவரின் நினைவாக அதற்கு PGP திருமண மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது.
திரு. கோவிந்தசாமி, இந்தியச் சமூகத்துக்கும், சிங்கப்பூருக்கும் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் 2001ஆம் ஆண்டு, சிங்கப்பூர் அஞ்சலகம் நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டது.
அண்மையில் சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவு அனுசரிப்பிற்குச் சிறப்புச் சேர்க்கும் வண்ணம் புதிய 20 வெள்ளி பணநோட்டு வெளியிடப்பட்டது. அந்தப் பணநோட்டில் திரு. கோவிந்தசாமி பிள்ளை இடம்பெற்றுள்ளார்.