வெளிப்படுத்துதல் புஸ்தகம் எழுதப்பட்ட காலம் எது?
வெளிப்படுத்துதல் புஸ்தகம் எழுதப்பட்ட காலத்தை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம்.
கிபி 70க்கு முன் அது எழுதப்பட்டிருந்தால் இஸ்ரவேளுக்கு சொல்லப்பட்டபடி நியாயத்தீர்ப்பு நடந்தேறியிருக்க வேண்டும். ஆனால் கிபி 70க்கு பிறகு எழுதப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் தான் இயேசுவின் வருகையும் இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பும் நிறைவேறும்.
இந்த புத்தகத்தை யோவான் எப்போழுது எழுதினார் என்று பல வேறுப்பட்ட கருத்துகள் உள்ளன.
இது “கிபி 70க்கு முன்” அல்லது "கிபி 70க்கு பிறகு" எழுதப்பட்டதா?
கிபி 70 பிறகு எழுத பட்டிருந்தால்?
கிபி 130-202ல் வாழ்ந்தவர் ஐரேனியஸ், அவருடைய குறிப்புகள் மட்டுமே கிபி 95 பிறகு யோவான் எழுதி இருக்க வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.
கிபி 70க்கு முன் எழுதப்பட்டாதா?
ஆம் வேதமே அதற்கு சான்று.
கிபி 70க்கு முன் எழுதப்பட்டது என்பதற்கு வெளிப்படுத்தின புஸ்தகத்திலேயே பல ஆதாரங்கள் உண்டு. வெறும் வெளிப்டுத்துதல் புஸ்தகம் மாத்திரமல்ல எல்லா புதிய ஏற்பாட்டு புஸ்தகங்களும் கிபி 70ல் எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுவதற்குள் எழுதி முடிக்கப்பட்டது.
இயேசு சொன்னதை கவனியுங்கள்
லூக்கா 21:22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
1, யோவான் திரும்பவும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும்.
வெளிப்படுத்துதல் 10:11 அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.
வெளிப்படுத்துதல் கி.பி. 95-96 ல் எழுதப்பட்டது என்றால், யோவான் 90 வயதை தாண்டியிருக்க வேண்டும். அப்படியென்றால் "பல ராஜாக்களுக்கும், பல தேசங்களுக்கும்..." பயணம் செய்ய மற்றும் போதிக்க அந்த வயது மிகவும் கடினமானதாக இருந்திருக்கும்.
கிபி 70க்கு முன் எழுதப்பட்டிருந்தால், யோவான் அப்போழுது 60 வயதுள்ளவராய் இருந்திருக்கலாம். அந்த வயதில், தன்னுடைய பயணத்தை அவர் செய்ய சாத்தியம் இருந்திருக்கும்.
2, ஆசியாவில் இருந்த ஏழு சபைகள்.
ஆசியாவிலிருந்த சபைகளுக்கு நேரடியாக யோவான் எழுதிய கடிதங்கள், கிபி 70க்குள் எழுதப்பட்டதற்க்கு முக்கிய ஆதாரம்.
கிபி. 60ல் அப்போஸ்தலன் பவுல் ஆசியாவில் ஒன்பது சபைகளை நிறுவினார். அதில் 7 சபைகளுக்கு யோவான் கடிதங்கள் எழுதினார் என்று வெளிப்படுத்துதல் புஸ்தகத்தில் வாசிக்கிறோம்.
மொத்தம் ஒன்பது சபைகள் ஆசியாவில் இருந்தது, அவையாவன - கொலோசெ, எராப்போலி, லவோதிக்கேயா , எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா.
இதில் முன்று சபைகள் (கொலோசெ, எராப்போலி, லவோதிக்கேயா) கிபி 61ல் நில நடுக்கங்களால் அழிந்தது. சில ஆண்டுகளில் லவோதிக்கேயா பட்டனத்தின் சபை திரும்பவும் தூக்கி நிறுத்தப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் நடந்த ரோம யூத போரின் போது ஆசியாவில் வெறும் 7 சபைகள் இருந்தது. அவைகள் - லவோதிக்கேயா , எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா.
அப்போஸ்தலர்களால் நிறுவப்பட்ட சபைகள் ஒன்று கூட இன்றைக்கு அந்த பட்டனங்களில் இல்லை.
நீங்கள் உங்கள் சபைகளுக்கு பிலதெல்பியா சபை என்று பெயர் வைத்ததினால் வெளிப்படுத்துதலில் சொல்ல பட்டது உங்கள் சபைகளுக்கு சொல்லப்பட்டது என்று கிடையாது.
முதல் நூற்றாண்டு சபைகளாகிய லவோதிக்கேயா , எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா மட்டுமே யோவான் எழுதினார்.
இன்னும் சொல்லப்போனால் முதல் நூற்றாண்டு சபைகள் வாழ்ந்தது போல இன்றைக்கு ஒரு சபைகளும் கிடையாது.
இதை கவனியுங்கள்.
பிலதெல்ப்பிய சபைக்கு கர்த்தர் இப்படி சொன்னார்
Rev 3:11 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
யோவான் குறிப்பிடுகிற பிலதெல்பிய சபை (Metropolis of Philadelphia)
முதல் நூற்றாண்டுக்கு பிறகு அங்கே இல்லை.
தியாத்தீரா சபைக்கு கர்த்தர் இப்படி சொன்னார்
வெளிப்படுத்துதல் 2:25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
தியாத்தீராவில் இன்னும் அந்த சபை இருக்கிறதா? இன்னும் சொல்லப்போனால் கிபி 70 க்கு பிறகு அந்த சபை இல்லை. இப்போழுது அந்த பட்டனத்தில் முஸ்லீம் சகோதரர்கள் வாழ்கிறார்கள். அந்த பட்டனம் இஸ்ரில் என்று அழைக்கப்படுகிறது.
கிபி 70க்கு பிறகு அந்த எழு சபைகளும் இல்லை. அப்படியென்றால் யோவான் அதற்கு முன்னரே (கிபி64) வெளிப்படுத்துதலை எழுதியிருக்க வேண்டும்.
3, கிபி 70க்கு பிறகு எருசலேம் ஆலயம் இல்லை
வெளிப்படுத்துதல் எருசலேம் ஆலயம் அழிக்கபடும் முன்னரே எழுதப்பட்டது என்பது மிக பெரிய ஆதாரம்.
வெளிப்படுத்துதல் 11: 1-2,
பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
கிபி 70ல் நின்று கொண்டிருந்த எருசலேம் தேவாலயத்தை தான் இந்த வேத வசனம் குறிக்கிறது.
சிலர் சொல்லுகிறது போல் இந்த வசனம் முன்றாவது ஆலயத்தை குறிக்குமோ? இல்லை.
முன்றாவது ஆலயம் கட்டப்படும் என்பது வேதத்தில் ஒரு இடத்தில் கூட சொல்லப்படவில்லை.
புறஜாதிகள் தேவாலயத்தையும், எருசலேம் ஆலயத்தையும் மிதிப்பார்கள் என்பதை இயேசு தான் பூமியில் வாழ்ந்தபோதே (கிபி30) சொல்லியிருந்தார்.
லூக்கா 21:20 -24
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும்கடவர்கள்.
எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
சிஷர்கள் இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் என்று கேட்டபோது, அந்த சந்ததியின் காலத்திலேயே நடக்கும் என்று இயேசு சொல்லியிருந்த்தார்.
இதை கவனமாய் வாசியுங்கள்.
இயேசு தேவாலயம் இடிக்கப்படுவதை குறித்து பேசுகிறார்.
லுக்கா 21:5-6
பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது,
அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
அதற்கு சிஷர்கள், இவைகள் ( குறிப்பாய் ஆலயம் இடிக்கப்படுவது) எப்போழுது சம்பவிக்கும் என்று கேட்டார்கள்.
லூக்கா 21:7
அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு சொன்னார்.
லூக்கா 21:32
இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அந்த சந்ததியின் காலத்திலேயே அந்த ஆலயம் இடிக்கப்படும் என்று இயேசு சொன்னது போலவே கிபி 70ல் ரோமர்கள் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி போட்டார்கள்.
யோவானை அலந்து பார்க்க சொன்ன ஆலயமும், ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராது என்று சொன்ன ஆலயமும், ஒரே ஆலயம் தான்.
ஆக, கிபி 70 பிறகு எருசலேம் ஆலயமும் இல்லாத படியால், ஆலயம் நின்று கொண்டிருந்த போதே, அதாவது கிபி70க்கு முன்னரே வெளிப்படுத்துதல் எழுதி முடிக்க பட்டிருக்க வேண்டும்.
கிபி70 பிறகு எழுதப்பட்டிருந்தால், இல்லாத ஆலயத்தை எப்படி அலந்து பார்க்க சொல்லமுடியும்? இல்லாத ஆலயத்தை எப்படி புறஜாதிகள் மிதிப்பார்கள் என்று சொல்லமுடியும்?
தொடரும்......