Loading

இரணைத்தீவு குடியேறி மூன்று வருடங்களின் பின்னர் முகம்கொடுக்கும் சவால்கள்

ருக்கி பெர்ணான்டோ

கொவிட்-19 இனால் இறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பதற்கு தீவை உபயோகிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அங்கு வதிவோர்கள் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் இரணைதீவு, இந்த மாதம் வெளிவந்த செய்திகளில் தேசிய மட்டத்தில் அதிகம் இடம் பிடித்தது.

ஏப்ரல் 23, 2018 அன்று, 25 வருடங்களுக்கும் மேலாக இலங்கை கடற்படையினர் அபகரித்துவைத்திருந்த, தங்களது நிலத்தை இரணைதீவு வாசிகள் மீளக்கோரினர். சிறிசேன - ரணில் அரசாங்கம் மற்றும் அதேபோன்று ராஜபக்‌ஷ அரசாங்கம் என்பவற்றால் அடிப்படை உட்கட்டமைப்பு அபிவிருத்தி வழங்க மறுத்தமையால் அத்தீவில் பாரம்பரியமாகக் குடியிருந்தோர்களின் அர்த்தபூர்வமான மீள்குடியேறுதல் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் என்பவற்றுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 9, 2021 அன்று அத்தீவிற்கான ஒரு குறுகிய விஜயத்தின் போது அவதானித்த சவால்களின் ஒரு கண்ணோட்டம் கீழே தரப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகளின்மை காரணமாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் உட்பட தீவில் வதிவோர்கள் மீளவும் ஒன்றிணைந்து தங்களது தீவு கொவிட் - 19 தொற்றினால் இறந்தவர்களுக்கான புதைநிலமாக உபயோகிக்கப்படுவதற்கு எதிராக தங்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றனர்.

தீவிலுள்ள, வரலாற்று ரீதியான கத்தோலிக்க தேவாலயம் சமூக வாழ்க்கைக்கான மையமாகவுள்ளது.

தேவாலயத்தின் குருவுக்கு முறையான ஒரு தங்குமிட வசதியில்லை.
திருக் குடும்ப கன்னியாஸ்திரிகள் தங்கியிருந்த மடம் தற்போது பாழடைந்து சிதிலமாக உள்ளது.
அரசாங்க அலுவலகங்கள் மற்றும் ஏனைய சமூகக் கட்டடங்களும் பாழடைந்து சிதிலமாகியுள்ளன.

வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கு எந்த உதவிகளுமில்லை.

பாடசாலை மீளக்கட்டப்படவில்லையென்பதுடன் கட்டடங்கள் பாழடைந்து சேதமடைந்துள்ளன.

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான வதிவிடங்களும் பாழடைந்து சிதிலமாகியுள்ளன.

விரிவான மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலக்கீழ் நீர் சேமிப்பு முறைமை மறுசீரமைக்கப்படவில்லை

தீவிற்கும் பிரதான நிலத்திற்குமிடையில் பயணிகள் போக்குவரத்து படகு சேவையில்லை.