Loading

குறுக்குத் தீவுப் பாதை எப்படி கட்டங்கட்டமாக உருப்பெறுகிறது?

தீவின் குறுக்கே செல்லவிருக்கும் பாதை எப்படி உருப்பெறும்...அதன் கால அட்டவணை இதோ...

எத்தனை நிலையங்கள்?

முழுமையாக முடிவடையும்போது பாதையில் 30க்கும் மேற்பட்ட நிலையங்கள் அமையும். முதற்கட்டமாக 12 நிலையங்கள் கட்டப்படும்.

நிலையங்கள் என்னென்ன?

  • பிரைட் ஹில்
  • டெக் கீ
  • அங் மோ கியோ
  • டேவிஸ்டாக்
  • சிராங்கூன் நார்த்
  • ஹவ்காங்
  • டேஃபூ
  • தெம்பனிஸ் நார்த்
  • பாசிர் ரிஸ்
  • பாசிர் ரிஸ் ஈஸ்ட்
  • லோயாங்
  • அவியேஷன் பார்க்

2013

போக்குவரத்துப் பெருந்திட்டத்தின் ஓர் அம்சமாக குறுக்குத் தீவுப் பாதை அறிவிக்கப்பட்டது. அப்போது பாதையின் ஒரு பகுதி மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்புப் பகுதியின் குறுக்கே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

2014

ரயில் பாதைக் கட்டுமானத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்து ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.

2015 -2017

இயற்கை ஆர்வலர் குழுக்களுடன் ஆய்வுக் குழு மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகளை ஆராய்ச்சி செய்தது.

2018

ஆய்வுக் குழுவின் விசாரணை நிறைவடைந்தது. கட்டுமானத் தளம் அமையும் இடத்தில் வனவிலங்குகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

2019

இயற்கை ஆய்வுக் குழுக்களும் கட்டுமானக் குழுவும் நடத்திய கலந்துரையாடலில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் கட்டுமானத்தை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டது.

டிசம்பர் 4ஆம் தேதி ரயில் பாதையின் ஒரு பகுதி மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்புப் பகுதிக்கு நேர் கீழே அமையும் என்று அறிவிக்கப்பட்டது.

2020

குறுக்குத் தீவுப் பாதையின் முதற்கட்ட நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கும். குறுக்குத் தீவுப் பாதை, நிலத்துக்கு 25 மாடி அடியில் அமையும். பூமியின் அடியில் உள்ள மணல் பகுதிக்குக் கீழ், கல் பகுதியில் நடக்கும்.

2029

2029ஆம் ஆண்டு இறுதிக்குள் முதற்கட்ட நிலையங்கள் திறக்கப்படும்.

(படங்கள்: CNA, LTA)