துறைமுகத்தின் வளர்ச்சியில் ஓர் இந்தியரின் அளப்பரிய பங்கு இருந்தது பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?
அவர்தான் கொடைவள்ளல் கோவிந்தசாமிச் செட்டியார்.
1906ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடி சிங்கப்பூருக்கு வந்தார் திரு. கோவிந்தசாமி.
10 ஆண்டுகள் கழித்து அவர் தமிழ்த் தொழிலாளர் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நிர்வகிப்பதிலும் அவர்களின் நலனிலும் கவனம் செலுத்தியது.
சமூகம், சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்குத் திரு. கோவிந்தசாமி ஆற்றிய பங்கிற்காக சமாதான நீதிமானாக நியமிக்கப்பட்டார்.
1948ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். பிரம்மாண்டமாக நடைபெற்ற அவரின் இறுதிச்சடங்கில் 5,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், சிங்கப்பூர்த் துறைமுக வாரியம் தனது செயல்பாடுகளை நிறுத்தியது.